உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி
Published on

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று அரசினர் மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. அங்கு மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com