உலக மக்கள் தொகை தினம்: திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டி


உலக மக்கள் தொகை தினம்: திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டி
x

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கார்டூன் வரைதல் போட்டி குடும்பம் மற்றும் நம்பிக்கைக்குரிய உலகம் எனும் தலைப்பில் நடைபெற்றது.

திருநெல்வேலி

உலக மக்கள் தொகை தினத்தினை (World Population Day) அனுசரிக்கும் வகையில் இன்று (11.7.2025) திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 7 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கார்டூன் வரைதல் போட்டி குடும்பம் மற்றும் நம்பிக்கைக்குரிய உலகம் (Family and Hopeful World) எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 174 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து சிறந்த கார்ட்டூன்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அதிகாரி குமார் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் சங்கர்நகர், ஸ்ரீ ஜெயேந்திர மெட்ரிக் கோல்டன் ஜூபிலி மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் ஷர்நிதா வர்ஷா என்ற மாணவி முதல் பரிசையும், முனைஞ்சிபட்டி, குரு சங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் கோசல் ராம் என்ற மாணவன் இரண்டாவது பரிசையும், பொதிகைநகர், ஜோஸ்மார்ட் மேல்நிலைப்பள்ளி மாணவன் அகவழகன் மூன்றாம் பரிசையும் பெற்றனர். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட 7 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் செய்திருந்தார்.

1 More update

Next Story