குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா

குடும்ப நலத்துறை சார்பில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட உள்ளது என்று துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா
Published on

குடும்ப நலத்துறை சார்பில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட உள்ளது என்று துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினம்

சிவகங்கை மாவட்ட மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் தர்மர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தாய் சேய் நலத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உலக மக்கள் தொகை தினம் ஒரு மாதத்திற்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை 15 நாட்கள் மக்களை அணி திரட்டும் காலமாக கொண்டாகுடும்ப நலத்துறை சார்பில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட உள்ளது என்று துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.டப்படுகிறது.

இதே போல 11-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை உள்ள 15 நாட்கள் மக்கள் தொகையினை நிலைப்படுத்தும் காலமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

விழிப்புணர்வு

மக்களிடையே பல்வேறுபட்ட குடும்ப நல முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தகுதி வாய்ந்த தம்பதிகள் தங்களுக்கு உகந்த கருத்தடை முறைகளை ஏற்று கொள்ளவும், ஒரு மாதத்திற்கு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட உள்ளது. தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட குடும்ப நல முறைக்கான சேவைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்கு அரசு வழங்கும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com