

சென்னை
தஞ்சையில் உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
அப்போது அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் (மன்னார்குடி) பேசும்போது, எனது தொகுதியில் 100 ஆண்டு கால பிரச்சினையான நீடாமங்கலம் பேரூராட்சிக்கு பஸ் நிலையம் கட்டப்படும் என்ற அறிவிப்பை (நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை) வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு மன்னார்குடி தொகுதி மக்கள் சார்பிலும், நீடாமங்கலம் பேரூராட்சி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் ராஜ்மோகன், த.வெ.க. அரசு விரைவில் உலக தமிழ் மாநாட்டை நடத்தும் என்று அறிவித்தார். அவ்வாறு உலக தமிழ் மாநாட்டை நடத்தினால் அதனை தஞ்சையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.