நீரின் முக்கியத்துவத்தைப் போற்றிடும் “உலக தண்ணீர் தினம்” - எடப்பாடி பழனிசாமி பதிவு

உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீரின் முக்கியத்துவத்தைப் போற்றிடும் “உலக தண்ணீர் தினம்” - எடப்பாடி பழனிசாமி பதிவு
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது .

“நீரின்றி அமையாது உலகு” என்ற உலகப் பொதுமறையின் வாக்கின்படி, உலகிற்கே அடிப்படை ஆதாரமாக விலகும் நீரின் முக்கியதுவதைப் போற்றிடும் “உலக தண்ணீர் நாளான” இன்று,

வானின்று பொழியும் நீரையும் காக்கும் “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை அம்மா செயல்படுத்தியதையும், தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காக்க குடிமராமத்து திட்டத்தை எனது தலைமையிலான

அதிமுக அரசு செயல்படுத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்வதுடன், விரைவில் அமையவுள்ள கழக ஆட்சியானது தமிழகத்தின் நீர்வளத்தைக் காத்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com