பாஜக மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? - சரத்குமார் பதில்

சரத்குமாரை தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? - சரத்குமார் பதில்
Published on: 

சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியதைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

பாஜக மாநிலத் தலைவர் பதவி

இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிபட்டாலும், பாஜகவில் ஏற்கெனவே மாநிலத் தலைவராகப் பணியாற்றியவர்களை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது இல்லை என்பதால், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

பதவி கொடுத்தால் ஏற்பீர்களா?

அந்த வகையில், தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து, பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் நடிகர் சரத்குமாரை தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சென்னையில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சரத்குமார் பேசியதாவது;

”அது போன்ற முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாகத் தன்னிடம் தெரிவிக்கப்படும் போது அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். தற்போதைக்கு ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. கட்சித் தலைமை முடிவெடுத்த பின்பே அடுத்தகட்ட ரியாக்‌ஷன் இருக்கும்.” என்று அவர் பதிலளித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com