என்னை கூட்டணிக்கு அழைத்திருக்க மாட்டார்களா? பணத்தை விட என் மக்களின் மானம் பெரிது - சீமான்

நமது நாட்டில் வகுப்பறை வியாபார நோக்கமாக உள்ளது என சீமான் கூறியுள்ளார்.
என்னை கூட்டணிக்கு அழைத்திருக்க மாட்டார்களா?  பணத்தை விட என் மக்களின் மானம் பெரிது -  சீமான்
Published on

தேனி,

போடிநாயக்கனூரில் நாதக சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தண்னீர், மருத்துவம், கல்வி விற்பனை பண்டமாகிவிட்டது. பிரிட்ஜ் தருவார்கள், ஆனால் அதற்குள் வைக்கும் காய்கறியை என் விவசாயிதான் தருவான்.நீ யாரும் இல்லாமல் வாழ முடியும், ஆனால் விவசாயி இல்லாமல் வாழ முடியாது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற முதல்வர்கள் கூட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவில்லை.நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தொடங்குகிறது.ஆனால் நமது நாட்டில் வகுப்பறை வியாபார நோக்கமாக உள்ளது. விவசாயி விளைவித்த நெல்லுக்கு சேமிப்பு கிடங்கு இல்லை. மதுபானத்துக்கு குளிரூட்டப்பட்ட கிடங்கு உள்ளது.

எல்லா மாநிலத்திலும் கள் இருக்கிறது; இந்த மாநிலத்தில் மட்டும் கள் ஏன் இல்லை? ஏனெனில் டாஸ்மாக் மதுபான ஆலை விற்பனை குறைந்து விடும்; இதை யாராவது கேட்குறீர்களா?

என்னை கூட்டணிக்கு அழைத்திருக்க மாட்டார்களா? பணத்தை விட என் மக்களின் மானம் பெரிது; மாற்றத்துக்காக விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com