பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் 2 பெண்கள் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் 2 பெண்கள் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் 2 பெண்கள் படுகாயம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி அர்ச்சனா (வயது 28). இவர் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் தனது மாமியார் ராமாயி என்பவருடன் விவசாய தோட்டத்திற்கு வேலை காரணமாக சென்றார்.

பின்னர் சேலம்- அரூர் மெயின் ரோட்டில் தண்ணீர்தொட்டி பால் நிலையத்தின் அருகே மொபட்டை நிறுத்தி 2 பேரும் நின்று கெண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அர்ச்சனா, ராமாயி மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அர்ச்சனா கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com