வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வுசேலத்தில் 2,022 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வுசேலத்தில் 2,022 பேர் எழுதினர்
Published on

சேலம்

தொடக்க கல்வித்துறையில் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பணியிடம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சேலத்தில் இந்த தேர்வு எழுத குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத 2 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 411 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதன்படி மொத்தம் 2 ஆயிரத்து 22 பேர் நேற்று தேர்வு எழுதினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com