தமிழக காவல் துறையில் 8,826 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தொடங்கியது

தமிழக காவல் துறையில் 8,826 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தொடங்கியது.
தமிழக காவல் துறையில் 8,826 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தொடங்கியது
Published on

சென்னை,

தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

இதற்காக இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.20 மணி வரை, சுமார் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும். இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெறுவர்.

8,826 காலி பணியிடங்களுக்கு 228 மையங்களில் நடத்தப்படும் இந்த தேர்வில் சுமார் 3.22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னையில் மட்டும் 13 மையங்களில் காவலர் தேர்வு நடைபெறுகின்றது.

தேர்வு எழுதுவோர், தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் கொண்டுவர அனுமதி இல்லை. தேர்வுக்கு வரும்போது அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா, தேர்வு அட்டை மற்றும் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com