சங்கராபுரம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் யாக பூஜை

உலக நன்மை வேண்டி சங்கராபுரம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் யாக பூஜை நடைபெற்றது.
சங்கராபுரம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் யாக பூஜை
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே ஸ்ரீபாலாம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி யாக பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி யாக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com