நூல் விலை உயர்வு: மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் நாளை நேரில் வலியுறுத்தல்..!!

பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாளை மத்திய அமைச்சர்களை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.
நூல் விலை உயர்வு: மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் நாளை நேரில் வலியுறுத்தல்..!!
Published on

சென்னை,

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும் - அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், கேவை மாவட்டங்களை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் சுமார் 2 லட்சம் விசைத்தறி நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி மத்திய-மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாளை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் திமுக. எம்.பி. கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திக்க உள்ளனர். அனைத்து எம்.பி.க்களும், நெசவாளர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என நேரில் வலியுறுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com