திருச்செங்கோட்டில் ரூ.75 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.75 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 938 முதல் ரூ.12 ஆயிரத்து 669 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 591 முதல் ரூ.10 ஆயிரத்து 449 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11,001 முதல் ரூ.13 ஆயிரத்து 699 வரையிலும் விலை போனது. மொத்தம் 1,500 மஞ்சள் மூட்டைகள் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com