திருச்செங்கோட்டில் ரூ.1.30 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.1.30 கோடிக்கு மஞ்சள் ஏலம்
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 796 முதல் ரூ.8 ஆயிரத்து 589 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 208 முதல் ரூ.7 ஆயிரத்து 19 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.13 ஆயிரத்து 925 முதல் ரூ.14 ஆயிரத்து 599 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 3,000 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com