ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12681) இன்று (சனிக்கிழமை) ஒரு மணி நேரம் தாமதமாக சென்டிரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும்.

அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் ஏற்காடு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22649) இன்று 55 நிமிடம் தாமதமாக இரவு 11.55 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com