கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம்
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

யோகா பயிற்சி

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உலக யோகா தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியை முதன்மை மாவட்ட நீதிபதி இரா.சக்திவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மக்கள் நீதிமன்ற தலைவர் பி.வேல்முருகன், கூடுதல் மாவட்ட நீதிபதி உ.மோனிகா, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், மாஜிஸ்திரேட்டுகள் கார்த்திக் ஆசாத், ஸ்ரீவஸ்தவா, வக்கீல் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, வக்கீல்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனத்தில், பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மணையில் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர்கள் கோபு, சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். பிறகு மாணவர்களுக்கு யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டார மேற்பார்வையாளர் குமார், உடற்கல்வி இயக்குனர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், சுரேஷ்பாபு, கிருஷ்ணகிரி மாவட்ட பாரத சாரண சங்க துணை செயலர் பவுன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு பள்ளி

கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட காடுலக்கசந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசுலு தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com