

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு துறை மற்றும் நேரு யுவகேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 45 நிமிடங்கள் யோகா செய்தனர்.
நிகழ்ச்சியை தமிழ்நாடு யோகாசன சங்க மாநிலத் தலைவர் சங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சூரிய நமஸ்காரம், பாத அஸ்தாசனம், அர்த்தசக்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை மாணவ, மாணவிகள் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.