யோகா தின விழா

மணல்மேடு ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா நிகழ்ச்சி நடந்தது
யோகா தின விழா
Published on: 

உலக யோகா தினத்தை முன்னிட்டு மணல்மேடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளியில் யோகா தின விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் குலசேகரன், தாளாளர் லீலாவதி குலசேகரன்,மேலாளர் மதுசூதனன், நிர்வாக அலுவலர் சீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சத்திய மகேஷ்வரி, யோகா பயிற்சியாளர் தில்லைவளவன், வித்யா, முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com