ஆத்தூர் பள்ளிகளில் யோகா தினம்:மாணவ, மாணவியர் யோகாசன பயிற்சி

ஆத்தூர் பள்ளிகளில்யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர் யோகாசன பயிற்சி அளித்தனர்,
ஆத்தூர் பள்ளிகளில் யோகா தினம்:மாணவ, மாணவியர் யோகாசன பயிற்சி
Published on

ஆறுமுகநேரி:

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆத்தூர் முஸ்லிம் தெருவில் உள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவ மாணவியர்கள் 75 பேர் யோகாசன பயிற்சி செய்தனர். இவர்களுக்கு ஆத்தூர் பிரணவ யோகா ஆலயம் செயலாளர் மாஸ்டர் சுவாமிநாதன் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம், ஆசிரியர்கள் ஆனந்தராஜ், கமலி, ஜூலியாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செல்வன்புதியனூர் தொடக்கப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. மாணவ மாணவியர் நமஸ்கார ஆசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com