தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
Published on

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2023- ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான பொது தேர்வு நடைபெற உள்ளது.

இப்பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டின் படி 129 காலி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் 01.07.2023 அன்று 47 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 17-ந் தேதி ஆகும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com