மக்காச்சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
Published on

கடைசி நாள்

ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வருகிற 16-ந்தேதி ஆகும். நெல் சம்பா பயிருக்கு வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாளாகும். மக்காச்சோளம் பயிருக்கான பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.341, பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.521 மற்றும் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.567 ஆகும்.

பிரிமியம் தொகை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம். மேலும், விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்த்திட முன்கூட்டியே விண்ணப்பித்து பயன்பெறுமாறு, மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com