

சென்னை,
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு, தனியா மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நாசிங், பி.பாம். ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவம் சாந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்4 ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மருத்து கல்வி இயக்குனரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்து கல்வி இயக்குனரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.