எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர வரும் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவத்தில் சேர வரும் 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர வரும் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி இணையதள விண்ணப்ப பதிவு 22-ந்தேதி முதல் தொடங்கி அக்டோபர் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பத்தாரர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com