வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிசம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிசம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிசம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது, வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' முதல்-அமைச்சரால் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

தமிழகத்தை சேர்ந்த பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

அதன்படி, 2022-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/என்ற இணையதளம் மூலமாகவோ சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அரசு செயலாளருக்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com