

சென்னை,
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்றுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த வகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான ‛டெட்' தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் வருகின்ற 18-ம் தேதியிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 10 2026 ஆகும்.
முதல் தாள் தேர்வு: தற்காலிக தேர்வு நாள்: ஜூலை 4-ம் தேதி
2ஆம் தாள் தேர்வு: தற்காலிக தேர்வு நாள்: ஜூலை 5-ம் தேதி
விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
தேர்வு திட்டம், கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற விவரங்கள் தொடர்பான பிற தகவல்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.