மகளிர் உரிமை தொகை பெற ஜுன் 4ல் விண்ணப்பிக்கலாம்

கோப்புப்படம்
மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சென்னை
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது,
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும், ஒரு சிலர் விடுபட்டிருக்கின்றனர். அப்படி உள்ளவர்களுக்கு முதல்வர் ஒரு வாய்ப்பு தருகிறார். ஜூன், 4ஆம் தேதி மனுக்கள் வாங்க சொல்லி இருக்கின்றார். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story






