இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்!

மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்!
Published on: 

சென்னை,

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கான விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

கடந்த மே-ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டய தேர்வு (இடைநிலை ஆசிரியர்பயிற்சி தேர்வு) எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் விடைத்தாள் நகலை அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்தின் அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். விடைத்தாள் மறுகூட்டல் கட்டணம் ரூ.205 (தாள் ஒன்றுக்கு), மறுமதிப்பீட்டுக் கட்டணம் ரூ.505 ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com