இ-நாம் திட்டத்தில் விற்று கூடுதல் வருவாய் பெறலாம்

வேளாண் விளைபொருட்களை இ-நாம் திட்டத்தில் விற்று கூடுதல் வருவாய் பெறலாம் விவசாயிகளுக்கு, அதிகாரி அறிவுரை
இ-நாம் திட்டத்தில் விற்று கூடுதல் வருவாய் பெறலாம்
Published on

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வேளாண் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு, எவ்வித இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெற தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தக திட்டம், கடலூர் மாவட்ட வேளாண் விற்பனை துறை மூலம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூர் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் சேலம் மாவட்டம் மேச்சேரி உழவர் உற்பத்தி நிறுவனத்திற்கு இ-நாம் திட்டத்தின் மூலம் 3 டன் அளவுள்ள பலாப்பழம் ரூ.55 ஆயிரத்து 500-க்கு முதற்கட்டமாக விற்பனை செய்து, உரிய முறையில் வாகனம் மூலம் பலாப்பழம் சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இ-நாம் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விளைபொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com