மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்


மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்
x
தினத்தந்தி 20 Jun 2025 9:53 PM IST (Updated: 20 Jun 2025 9:58 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினம் நாளை (ஜுன் 21 ) கடைபிடிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், சர்வதேச யோகா தினம் நாளை (ஜுன் 21 ) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் நாளை கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story