கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டு அப்பாவரம் கிராமத்தை சேர்ந்த காளத்தி. இவரது மகள் ரேவதி (வயது 19). இவர். அஞ்சல் வழியில் பட்ட படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 5-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து அவர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com