இளம்பெண் சாவு

இளம்பெண் சாவில் சந்தேகம் என பாலீசில் புகார் செய்யப்பட்டது.
இளம்பெண் சாவு
Published on

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திபாண்டியன். ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாபாரதி (வயது 22). இருவருக்கும் திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மகாபாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாபாரதியின் சகோதரர் கவிபாரதி திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்தார். அதில், தனது தங்கை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார். மகாபாரதிக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடமே ஆவதால் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com