தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்திப்பு

தமிழ்நாட்டுக்கு பணி ஒதுக்கீடு பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து பேசினர்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்திப்பு
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை இன்று (செவ்வாய்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

அதாவது 2025-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு பணி ஒதுக்கீடு பெற்ற ஐ.ஏ.எஸ். பயிற்சி அலுவலர்கள் அமன் திவாரி, சித்தார்த் போக்கார்னா, ஆர்.மோனிகா, பி.பவித்ரா, ஜி.பி.நந்தனா, பாட்டீல் குருஸ்னா பப்ருவன், ஆர்.ஸ்ரீ ரூசட், எஸ்.சுபாஷ் கார்த்திக், ராகுல் ராகவன், துஷார் சிங், சாய் சைதன்யா ஜாதவ் ஆகியோர் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com