இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

இளம் பெண்ணை வாலிபர் மிரட்டி உள்ளார்.
இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், திருப்பத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

இளம்பெண் திடீரென விக்னேசை பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் இளம் பெண்ணை மிரட்டி உள்ளார். மேலும் காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை நேற்று கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com