கிண்டி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
கிண்டி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
Published on

சென்னை,

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் மிரட்டல் அழைப்பு வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த கிண்டி போலீசார், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நாகர்கோவிலைச் சேர்ந்த பிரதீஷ் (25) என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com