பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
Published on

ஈரோடு,

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 20). கூலி தொழிலாளி. இவர் வேலை தொடர்பாக அடிக்கடி ஈரோடு வந்து சென்றார். அப்போது ஈரோட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வல்லரசு ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதையறித்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வல்லரசை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com