காதலித்த பெண்ணை அவமானப்படுத்த திருமண அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம் வாலிபர் கைது

காதலித்த பெண்ணை அவமானப்படுத்த திருமண அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காதலித்த பெண்ணை அவமானப்படுத்த திருமண அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம் வாலிபர் கைது
Published on

அருமனை:

காதலித்த பெண்ணை அவமானப்படுத்த திருமண அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருமண அழைப்பிதழ்

அருமனை அருகே திருவரம்பு அம்பலங்காலை பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பைஜுகுமார் (வயது 28). இவர் கல்லூரியில் படித்த போது ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார்.

அப்போது அந்த மாணவியை பைஜூகுமார் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் பைஜூகுமாரின் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி அவரை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

எனினும் பைஜூகுமார் அவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருடைய காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இதனால் காதலித்த பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என கருதி இளம்பெண்ணுக்கும், தனக்கும் திருமணம் என அழைப்பிதழ் அச்சடித்து பைஜூகுமார் பொதுமக்களுக்கு வினியோகம் செய்துள்ளார்.

கைது

இதுகுறித்து பெண்ணின் வீட்டார் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் பைஜூகுமாரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com