சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வசித்து வருபவர் செந்தில். இவரது மகன் பிரசாந்த் (வயது26), கூலித்தொழிலாளி. பிரசாந்த் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) இந்திரா பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்

X

Daily Thanthi
www.dailythanthi.com