பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது

பள்ளி மாணவி பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். மேல்திருத்தணி அமிர்தாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (21) மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த மாதம் வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாணவி மாயமானது குறித்து பெற்றோர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மதியரசன் போக்சோ வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரவீனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






