திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது

மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிங்காரவேலு தெருவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு தேவகோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 29), என்பவர் மதுபாட்டில்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com