

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் நல்லாண்டவர் (வயது 37). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு பறிப்பதற் காக ஏறினார். அப்போது திடீரென அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதைக்கண்டதும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.