மொட்டைமாடியில் இளம்பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்..காலையிலே பார்க்க கூடாத காட்சியை பார்த்த மகள்

புஷ்பாவுக்கும் அவரது உறவுக்கார வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
மொட்டைமாடியில் இளம்பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்..காலையிலே பார்க்க கூடாத காட்சியை பார்த்த மகள்
Published on

சென்னை,

சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது தெருவில் வசித்து வந்தவர் புஷ்பா (வயது 37). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் உறவினர்களுடன் இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

நேற்று காலை வீட்டின் மொட்டை மாடியில் புஷ்பா, கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம், கைகளில் காயங்கள் இருந்தது. சிறிது நேரம் கழித்து மாடிக்கு சென்ற அவரது மகள், தாய் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ராமாபுரம் போலீசார் புஷ்பா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் புஷ்பாவின் உறவினர் மகனான மதுரவாயலை சேர்ந்த 34 வயது வாலிபர் இரவில் புஷ்பா வீட்டுக்கு வந்துவிட்டு நேற்று அதிகாலையில் தனியாக நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பாவுக்கும் அவரது உறவுக்கார வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

அவர் அடிக்கடி புஷ்பா வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் புஷ்பா வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் தனியாக இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் புஷ்பாவை உறவுக்கார வாலிபர் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com