தியேட்டரில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் - போலீசார் விசாரணை

கோப்புப்படம்
வாலிபரை பிடித்து தியேட்டர் நிர்வாகத்தினர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பரோடு உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர் ஒருவர் தொடர்ந்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். வாலிபரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் கல்லூரி மாணவி கூச்சல் போட்டார்.
உடனடியாக சினிமா காட்சி நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோடி தியேட்டரில் உள்ள கழிவறையில் புகுந்துகொண்டார். அவரை பிடித்து தியேட்டர் நிர்வாகத்தினர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரது பெயர் ராஜேஷ் (33 வயது) என்று தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story






