நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர்.. அடுத்து நடந்த விபரீதம்

இளைஞர் பாம்பை பிடிக்க முற்படும்போது பாம்பு கடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர்.. அடுத்து நடந்த விபரீதம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் புகுந்த பாம்பை பிடிப்பதற்காக, நண்பர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் நண்பர் வீட்டிற்கு சென்ற ராஜமுருகன் நாகப்பாம்பை பிடிப்பதற்காக கட்டையில் தலையை அழுத்தி பிடித்து பாம்பை பிடிக்க முற்பட்டு உள்ளார்.

அப்போது பாம்பு கைவிரலில் கடித்தது. பின்னர் கைவிரலில் துணியை கட்டிக்கொண்டு மீண்டும் பாம்பை பிடிக்க முற்பட்டு உள்ளார். வலி அதிகமான நிலையில், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் விஷம் உடல் முழுவதும் பரவி, சுயநினைவை இழந்துள்ளார். அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

விளையாட்டாக பாம்பை பிடிக்க முற்பட்டு இளைஞர் உயிரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பாம்பை பிடிக்க முற்படும்போது பாம்பு கடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com