நாமக்கல்லில் ஆபாச செயலியில் ஆசை காட்டி வாலிபர்களிடம் பணம் பறிப்பு

நாமக்கல்லில் ஆபாச செயலி மூலமாக ஆசை காட்டி, வாலிபர்களை ஓரின சேர்க்கைக்கு வரவழைத்து பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்லில் ஆபாச செயலியில் ஆசை காட்டி வாலிபர்களிடம் பணம் பறிப்பு
Published on: 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு செல் போனில் ஆபாச செயலி மூலமாக நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த நவாஸ் (வயது 19) என்பவர் நண்பர் ஆனார். அப்போது நவாஸ் அவரை நாமக்கல் லுக்கு வருமாறும், இங்கு தான் ஓரின சேர்க்கைக்கு அழைத்து செல்வதாகவும் கூறினார். அதை நம்பி அந்த நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் வந்தார்.அப்போது நவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அந்த வாலிபரை தாக்கி அவர் செல்போனில் ஜி.பே. மூலமாக ரூ.7 ஆயிரத்தை பறித்துக் கொண் டனர். இது குறித்து அந்த வாலிபர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

4 பேர் கைது

இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் அதே ஆபாச செயலி மூலமாக நவாஸ் தரப்பினர் தொடர்பு கொண்டு ஓரின சேர்க்கைக்கு கடந்த 9-ந் தேதி அழைத்தனர். நாமக்கல் வந்த அந்த வாலிபரையும் நவாஸ் கோஷ்டி தாக்கி ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் பறித்த னர்.இது குறித்து அந்த நபரும் நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகார்கள் மீது நாமக்கல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த ஜீவ பாரதி (20), சேந்தமங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்த விஜய் (20), பெரியப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் நவாஸ் (19), பெரியப்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் என மொத்தம் 4 பேர் இந்த பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

பதிவிறக்கம் செய்ய கூடாது

இது குறித்து போலீசார் கூறியதாவது:- ஆபாச செயலிகள் மூலமாக வாலிபர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை வர வழைத்து, தாக்கி பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தேவையற்ற செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்ய கூடாது.-இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நாமக்கல்லில் ஓரின சேர்க்கைக்கு ஆண்களை வரவழைத்து பணம் பறித்த கும் பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com