குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன்,தள்ளிட்டு வந்தா பைன் போடக்கூடாது - போலீசாரிடம் இளம்பெண் வாக்குவாதம்

க பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன்,தள்ளிட்டு வந்தா பைன் போடக்கூடாது - போலீசாரிடம் இளம்பெண் வாக்குவாதம்
Published on

சென்னை

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சத்யராஜ் மற்றும் வினோத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதனை உறுதி செய்வதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, சத்யராஜ், தனது மனைவி அக்ஷயாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அக்ஷயா ,போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தால் மட்டுமே பைன் போட வேண்டும் எனவும், வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் பைன் போடக்கூடாது எனவும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எம்பி-ஐ அழைத்து வர வேண்டுமா? எம்எம்ஏ-வை அழைத்து வர வேண்டுமா? என்று கேள்வி கேட்ட அக்ஷயா, போலீஸ்காரர்கள் எல்லாருமே பிராடு தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ்காரர் ஒருவரையும் அவர் தாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில், போலீஸ்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா, நண்பர் வினோத் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com