உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு.. பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்கள்...இளம்பெண் கைது


உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு.. பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்கள்...இளம்பெண் கைது
x

வாலிபர்களை உல்லாசத்துக்கு அழைப்பது போல் லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரிய வந்தது.

நாகர்கோவில்,

சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணில் பேசிய பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பல வாலிபர்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் போலி முகநூல் ஐ.டி. மூலம் உல்லாசமாக இருக்கலாம் என பணம் பறித்து ஏமாற்றிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நபிலா பேகம் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

பேஸ்புக் ஐ.டி. பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறுவார். அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் இளம்பெண் ஒருவரை கைது செய்து உள்ளோம்.

இளம்பெண்களுடன் வீடியோ கால் செய்ய தனி ரேட், வீடியோ காலில் ஆடையின்றி நிர்வாணமாக நின்று பேச தனி ரேட், ஆபாச சாட்டிங் செய்ய தனி ரேட், உல்லாசமாக இருக்க தனி ரேட் என கூறி பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளனர் என தெரிவித்தனர்.

1 More update

Next Story