மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறித்த இளம்பெண் கைது

8 பவுன் தங்க சங்கிலியை இளம்பெண் பறித்துக்கொண்டு தான் வந்த ஸ்கூட்டரில் தப்பி சென்றார்.
மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறித்த இளம்பெண் கைது
Published on: 

திருச்சி,

வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலியை பறித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி வசந்த நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 86), ஓய்வு பெற்ற தனியார் சர்க்கரை ஆலை ஊழியர். இவரது மனைவி சம்பூரணம் (76). கணவன்- மனைவி மட் டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 5-ந் தேதி காலை நாகராஜன் வீட்டுக்கு சென்ற இளம்பெண் ஒருவர் அவரிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என விசாரித்துள்ளார். அப் போது, இளம்பெண் தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து, நாகரா ஜன் தண்ணீர் கொண்டு வர சென்றார். அப்போது. சோபாவில் அமர்ந்து இருந்த மூதாட்டி சம் பூரணம் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை இளம்பெண் பறித்துக்கொண்டு தான் வந்த ஸ்கூட்டரில் தப்பி சென்றார்.

இளம்பெண் கைது

இந்த சம்பவம் குறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில், லால்குடி போலீஸ் துணை சூப் பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரன் மற் றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

விசாரணையில், மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளம்பெண், லால்குடி அருகே மேலவாளை பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி (23) என்பது தெரிய வந்தது. இதைய டுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 பவுன் சங்கிலி மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். பின்னர் உமா மகேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com