திருமணமான 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை: சாவில் மர்மம் உள்ளதாக தந்தை புகார்

பட்டுக்கோட்டை அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி மகள் ஜான்சி அஞ்சலிக்கும் (26 வயது) கடந்த 4-ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து 4 நாட்களே ஆன நிலையில் கடந்த 8-ந்தேதி இரவு மாப்பிள்ளை குடும்பத்தினர் அம்மாப்பேட்டையில் உள்ள மூர்த்திக்கு போன் செய்து உங்கள் மகள் ஜான்சி அஞ்சலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக மூர்த்தி பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பற்றி பட்டுக்கோட்டை உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com