திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அம்சா (25 வயது). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிபாரதி சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த அம்சா, திடீரென மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த களமருதூர் போலீசார் விரைந்து சென்று, அம்சாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அம்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com