மாம்பலம் அருகே மின்சார ரெயில் மோதி இளம்பெண் பலி

மாம்பலம் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற இளம்பெண் ரெயில் மோதி உயிரிழந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

விழுப்புரம் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஜானகி (18 வயது). இவர், சென்னையில் தங்கியிருந்து தியாகராய நகரில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ஜானகி, மாம்பலம் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி ஜானகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com